Header Adsகொடியேற்றம் எனும் கொடி வணக்கம்!

கொடியேற்றம் எனும் கொடி வணக்கம்!

மெளலவி - ஜே.எம். சாபித் ஷரயி

இஸ்லாத்தில் தோன்றிய வழிகேடுகளில் ஸூபிஸமும் ஒன்றாகும். இவர்களைப் பற்றி சுருங்கக் கூறின் இஸ்லாமிய ஸஹீஹான அகீதாவை விட்டும் வெளியேரிய பிரிவினர் அல்லாஹ்வுடைய அஸ்மாக்கள் ஸிபாத்துகளுடைய விடையத்திலும் இன்னும் பல அகீதாவுடைய அம்சங்களிலும் வழிகெட்ட பிரிவினர்களாக அஹ்லுஸ்ஸுன்னாவுடைய இமாம்களால் எச்சரிக்கை செய்யப்பட்டவர்கள்.

இவர்களிடம் பொதிந்துள்ள ஓர்  பொதுப்படை யாதெனில் இஸ்லாமிய சட்டவாக்கம் மற்றும் இபாதத்களில் (العلو) இஸ்லாம் வகுத்த எல்லையை தாண்டி இறைவனை நெருங்க முற்படுவதாகும்.

அதில் இங்கு குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில் அவ்லியாக்கள் இறை நேசர்களில் எல்லை கடந்து வஸீலா எனும் பெயரில் அவர்களை அல்லாஹ்வுடைய இடத்திற்கும் நபி ஸல் அவர்களுடைய இடத்திற்க்கும் கொண்டு செல்வதாகும். அவைகளாவன

01- அவர்கள் அவ்லியாக்கள் என நினைப்பவர்கள் உயிரோடு உள்ள பொழுது அவர்களிடம் பரகத்தை தேடுதல் அவர்களது உடலில் படுத்திய நீரைக் கொண்டு பரகத் மற்றும் நோய் நிவாரணம் தேடுதல்.

02- அந்த அவலியாக்கள் மரணித்துவிட்டால் அவர்களுடைய கப்ரை கட்டியெழுப்பி, குத்துவிளக்கேற்றி, எண்ணெய் ஊற்றி, பச்சை துணியால் அந்த கப்ரை மூடி அலங்கரித்து, அங்கு அடங்கப்பட்டிருக்கும் மரணித்தவரிடம் உதவி தேடி அந்த கப்ரை வணங்குவதாகும்.

03- அந்த கப்ரில் அடங்கப்பட்டிருக்கும் அவ்லியாவின் ஞாபகார்தமாக வருடா வருடம் கொடிகளை ஏற்றி அதனை வணங்கி விழாக் கொண்டாடுவதாகும்.

இப்படி பலதை சொல்லிக்கொண்டே போகலாம்....

மேலே குறிப்பிட்ட அனைத்தும் இஸ்லாத்திற்கு எதிரான இணைவைப்பும், பித்அத்துக்களுமாகும்.

இதில் மிக முக்கியமான அம்சமாக ஷாகுல் ஹமீத் எனும் அவ்லியாவின் பெயரால் கல்முனை கொடியேற்ற பள்ளியில் அரங்கேறும் மடமைகள் மற்றும் இணைவைப்புகளைப் பற்றி சற்று விளக்கமாக கூறலாம் என நினைக்கின்றேன்.

முதலில் வருடாவருடம் எந்த ஷாகூல் ஹமீது ஆண்டவர் பெயரால் இவ்விழா கொண்டாடப்படுகின்றதோ அவருக்கு ஒரு கப்ர் இந்த கடற்கரை பள்ளிவாசலுக்குள் அமைக்கப்படிருப்பதனை காணலாம். ஆனால் அவர் அங்கு அடங்கப்படிருக்கிறாரா? என்றால் இல்லவே இல்லை அன்னார் இந்தியாவின் நாகூர் எனும் ஊரில் அடங்கப்பட்டிருக்கிறார் இன்றும் அவருடைய கப்ர் அங்கேதான் நாகூர் தர்ஹாவில் இருக்கின்றது.

விடையம் இப்படி இருக்க எப்படி இந்த ஆளில்லாத கப்ரை மக்களால் கல்முனையில் ஸியாரத்து செய்ய முடியும்?? இங்கு நடப்பது கப்ர் வணக்கமல்ல ஷாஹுல் ஹமீதின் பெயரில் கல் வணக்கம் என்பதே உண்மை. ஒருவருக்கு இரு கப்ர்கள் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

எப்படி இது கப்ரானது தெரியுமா?

கல்முனையில் உள்ள கடற்கரைப் பள்ளி (கொடியேற்றப் பள்ளியை) பொருத்த வரை அது உருவான வரலாறு தெரிந்திருக்க அவசியமான ஒன்றாகும்.  "கல்முனையில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட முஹம்மது தம்பி லெவ்வை என்பவரை அவரின் நோயின் காரணமாக தற்பொழுது கடற்கரைப் பள்ளி அமைந்திருக்கும் இடத்தில் ஒரு குடிசையை அமைத்து அவர் கடல் காற்றைப் பெற்று குணமடையும் பொருட்டு மக்கள் தங்க வைத்திருக்கிறார்கள். இவர் ஒரு நாள் வெள்ளிக்கிழமை இரவுத் தொழுகையை தொழுதுவிட்டு தூங்கிய பொழுது இவரது கனவில் பச்சை தலைப்பாகை அணிந்து வாட்டசாட்டமான உடலோடும் சந்திரனை ஒத்த முகத்தோடும் ஒருவர் தோன்றி உனது குடிசையின் கிழக்கே சுமார் 100 யார் தூரத்தில் கடற்கரை மண் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றது அந்த மண் முகட்டில் ஒரு அழகான தேசிப்பழமும் கான மயில் இறகும் வைத்திருக்கிறேன் நீ அவ்விடம் சென்று என் நினைவாக ஒரு இறையில்லத்தை அமைத்து விடு இன்றோடு உனது உடல் நோய் காணாமல் போய்விடும் எனது பெயர் ஸாஹுல் ஹமீத் எனக் கூறிவிட்டு மறைந்து விட்டாராம்." இவர் கண்னை விழித்ததும் உடலில் நோய் இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாதளவிற்கு நோய் குணமடைந்திருந்ததாம் குடிசையின் கிழக்கே 100 யார் தூரத்தில் சென்று பார்தாராம் மண்குவியலும் அதன் மேல் தேசிப்பழமும் மயிலிறகும் இரும்பதைக் கண்டு அங்குள்ள மரங்களை முறித்து அவ்விடம் ஒரு பந்தலை அமைத்துவிட்டு அன்று ஜும்ஆவிற்க்கு பிறகு மக்களிடம் போய் நடந்தவற்றை கூறி இருக்கிறார் மக்களும் வந்து பார்த்துவிட்டு அந்த பந்தலை அலங்கரித்து ஸாஹுல் ஹமீது நாயகத்தின் பெயரால் மவ்லிது ஓதவும் வருடா வருடம் ரபியுல் ஆகிர் முதல் பிறையோடு கொடியேற்றி கந்தூரி அன்னதானம் வழங்கவும் அரம்பித்தார்களாம்." (வீரகேசரி பத்திரிகை நவம்பர்-07-1994)

இப்படி ஒரு நோயாளி அங்கு தங்கவைக்கப்பட்டது உண்மை வரலாறுதான் ஆனால் அவர் கண்ட கனவும், அதில் உள்ளடங்கயிருப்பவைகளும் இஸ்லாத்திற்க்கு நேரெதிரானதும் மகா மடமை பொய் கட்டுக்கதைகளுமாகும்.

கனவில் வந்தவர் எப்படி  மண்குவியலையும், தேசிப்பழத்தையும், கான மயில் இறகையும் நிஞத்தில் கொண்டுவந்தார்?? இப்படி ஒரு அற்புதம் நடக்க இந்த ஷாஹுல் ஹமீத் யார் நபியா?? இதற்க்கு மார்கத்தில் ஒரு ஆதாரமேனும் உண்டா?? கிடையவே கிடையாது.

அடுத்து "கனவில் வந்தவர் பச்சை தலைப்பாகையோடு வந்தார்" அது ஏன் பச்சை?? மக்களை நம்ப வைக்கவா?? பச்சைக்கும் இஸ்லாத்திற்கும் ஏதும் சம்மந்தமுண்டா??

"நீ பள்ளிவாசல் ஒன்றை என் ஞாபகார்தமாக அமைத்தால் உன் தீரா நோய் நீங்கிவிடும்"
நோயை நீக்கும் அதிகாரம் பெற்றவன் ஒரே அல்லாஹ்வாக இருக்கும் பொழுது ஷாகூல் ஹமீது அந்த அதிகாரத்தை எப்பொழுது பெற்றார்?? இது தெளிவான இணைவைப்பு இல்லையா??

பள்ளியை அமைத்தால்தான் நோய் நீங்கும் என்றார் ஆனால் கனவிலிருந்து கண் விளித்த போதே நோய் குணமடைந்தது எப்படி?? இதுவொன்றே போதும் இது பொய்ப் பித்தலாட்ட சாமியார்களால் வயித்து பிழைப்புக்காக கட்டப்பட்ட கதையென்று.

இப்படித்தான் இந்த கலியாட்டம் இங்கு உறுவானது. இன்றும் இஸ்லாமிய அறிவற்ற ஒரு கூட்டம் இந்த இணைவைப்பு மடமையின் பின் அலைமோதுவது வேதனையான விடையமே!

உண்மையில் இந்த கொடியேற்ற விழாவில் நடப்பவைகள் இந்துக் கோயில்களில் நடப்பவைகளே! இதனை யாராலும் மறுக்க முடியாது. ஏனெனில் இக் கொடியேற்ற விழாவிற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை, இக்கொடியேற்ற உச்சவம் நடப்பது கோயில்களில்தான்.

இந்தக் கொடி இயற்றப்படுவதற்க்கு முன் மக்களால் வணங்கப்படுவதனை பின்வருமாறு அவதானிக்கலாம்.

கல்முனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இருந்து ஆரம்பமாகும் இக் கொடியேற்ற விழா முதலில் அந்தப் பள்ளிவாசலில் வைத்து கோயில்களில் நடப்பதைப் போல் வர்ணங்களாலும் மஞ்சள், சந்தனம், பன்னீர் பூசப்பட்டும் அலங்கரிக்கப்படும்.

பிறகு அக்கொடி எவ் வழிகளால் கடற்கரைப் பள்ளியை நோக்கி எடுத்துசெல்லப்படுமோ அவ் வீதிகளில் தண்ணீர் பவ்சர்களால் தண்ணீர் தெளிக்கப்பட்டு வீதிகள் சுத்தப்படுத்தப்படும்.

பின்னர் பக்தர்கள் அக்கொடிகளை தலையில் ஏந்தியவாறு காலில் செறுப்பணியாமல் பக்திப் பரவசத்தோடு கோயில்களில் இந்துக்கள் வழிபடுவது போலும் தேர் கொண்டு செல்வது போலும் அக்கொடியை வணங்கிய வண்னம் நடக்க ஆரம்பிப்பார்கள்.

அதன்முன்னும் பின்னும் வாள்கள் ஏந்திய பாதுகாவலர்களும் ஊத்தை பாவா மார்களும் சில அரபி பைத்துகளையும் ஸலவாத்துகளையும் ஓதிய வன்னம் ரபானம் கொட்டி நடமாடிச் செல்வார்கள்.

இன்னும் சில பக்தர்கள் இந்துக்கள் சவத்தை கொண்டு செல்வது போல் பட்டாசுகளை கொலுத்தி வீதி ஓரங்களில் போட்டு வெடிக்கவைத்து ஆண்களையும் பெண்களையும் வீதிக்கு வரவழைப்பார்கள்.

இப்படியே இக் கொடி கடற்கறை பள்ளியை அடைந்ததும் கஃபாவை தவாப் செய்வது போல் ஏழு முறை அப் பள்ளிவாசலை வளைத்து சுத்தப்படும் அப்போது அக் கொடியை முத்தமிடவும் தொட்டுக் கொஞ்சவும் அலைமோதும் ஆண்களையும் பெண்களையும் வார்தைகளால் வர்ணிக்க முடியாது. கொடியை தொடுபவர்களை விட அங்கு நெரிசலுண்டிருக்கும் பெண்களையும் குமருகளையும் தொட்டுக் கொஞ்சுவபவர்களே அதிகம் எனலாம்.

பிறகு அக்கொடி பறக்கவிடப்படும், தொடர்ந்து பன்னிரெண்டு நாட்களாக ஆண்களும் பெண்களும் ஒட்டி உரசி பகிரங்க விபச்சாரத்திலும் காதல் மற்றும் கூட்டிக்கொண்டு ஓடும் காரியங்களிலும் பக்தியோடு ஈடுபடுவார்கள்.

இப்பொழுது சொல்லுங்கள் இது ஒரு இபாதத்தா??? இந்த கலியாட்டத்திற்கும் இஸ்லாத்திற்கும் ஏதும் சம்மந்தமுண்டா??

இது தெளிவான வழிகேடு இணைவைப்பு என்பதனை உணர்ந்து கொள்ள குர்ஆன் வசனங்களோ ஹதீஸ்களோ தேவையில்லை நான் மேலே குறிப்பிட்ட அம்சங்களை ஆளப்புரிந்து கொண்டால் போதும்.

தெளிவான இக் கல் வணக்கத்தையும் கொடிவணக்கத்தையும் மனதளவில் கூட ஒரு முஃமினால் என்னிப்பார்க்க முடியாதளவிற்க்கு இக் கொடிய விழா அமைந்திருப்பதனை எவறும் மறுத்திட முடியாது. லைஸன் கொடுத்த விபச்சாரம் என்றாலும் மிகையாகாது.

எனவே அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! இந்த கொடிய விழாவை புரக்கணியுங்கள். அங்கு எந்த ஒரு தேவைக்காகவும் சென்று முழுப் பாவத்தையும் சுமந்த நரகவாதிகளாக உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள்! அல்லாஹ் எம்மை மரணம் வரை இணைவைப்பிலிருந்து பாதுகாப்பானாக!

இவர்களுக்கு வெகு சீக்கிரம் ஹிதாயத் கிடைக்க பிரார்திப்போம்.

!சொல்வது மட்டுமே எமது கடமை!

No comments

Powered by Blogger.