Header Ads



ரோஹிங்ய அகதிகளுக்கான நிதி கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில்

அல்ஹம்துலில்லாஹ்
ரோஹிங்ய அகதிகளுக்காக கல்முனை ஹுதா_ஜும்ஆ_பள்ளிவாசலினால் இன்று வெள்ளிக்கிழமை சேகரிக்கப்பட்ட நிதித் தொகை 201300/= (இரண்டு லட்சத்தி ஆயிரத்தி முன்னூறு ரூபாய்கள்) ஆகும் அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.

நாடலாவிய ரீதியில் ரோஹிங்ய அகதிகளுக்காக நிதிகளை திரட்டிவரும் அல்-கிம்மா நிறுவனம் மற்றும் அதனது ஊடக வலையமைப்பு Qtv Network யிடம் இன்று இஷா தொழுகையின் பின்னர் பள்ளிவாசல் நிர்வாகிகளால் திரட்டப்பட்ட நிதித்தொகை உத்தியோகபூர்வமாக கையளிப்பு செய்துவைக்கப்பட்டது.

இம்மகத்தான சேவைக்காக தங்களது பொருளாதாரத்திலிருந்து பணங்களை அள்ளி வழங்கிய அனைத்து சகோதரர்களுக்கும் ஹுதா ஜும்ஆ  பள்ளிவாசல் நிர்வாகம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு உங்கள் பொருளாதாரம் மென்மேலும் இரட்டிப்படைய வல்ல இறைவனிடம் பிறார்திக்கின்றது. ஜஸாகல்லாஹு ஹைறன்.

இப்படிக்கு - ஹுதா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை.

No comments

Powered by Blogger.