Header Adsமுகநூல் பாவனையாளர்களுடன் சாபித் ஷரயி ஒரு நிமிடம்
முகநூல் facefook பாவனையாளர்களுக்கு  ஓர் அன்பான மடல்

ஜே.எம்.சாபித் ஷரயி

இன்று சமூகவளைத்தலங்களில் அதிகம் மக்கள் மனதில் இடம்பிடித்த ஓர் வளைத்தளமாக முகநூல் (Facebook) திகழ்கின்றது.
இங்கு நான் உபதேசிக்க விரும்பும் விடையத்திற்குள் நேரடியாகவே நுழைகின்றேன்.
அதாவது முஸ்லீம்களில் ஆண்கள் பெண்கள் என பலரும் இதனை பயன்படுத்துகின்றோம். எங்களது மகிழ்ச்சி, துக்கம், அனுபவங்கள் என பலதரப்பட்ட செய்திகளை பதிகின்றோம் அதே நேரம் அவைகளை பகிரவும் செய்கின்றோம்.
இவ்வேளை எமது உடன்பிரப்புகள் சிலரது பதிவுகள் அவ்வப்போது எமது இஸ்லாமிய விழுமியங்களை பால்படுத்துபவையாகவும் இஸ்லாமிய வரையரைகளை மீறுபவைகளாகவும் அமைவதனை நாமும் இம்முகநூலைப் பயன்படுத்துபவர் என்ற வகையில் அடிக்கடி காணக்கிடைக்கின்றது.
நாம் அனைவரும் கலீமா சொன்ன முஸ்லீம்கள் ஈமான் கொண்ட முஃமீன்கள் என்பதனை மறந்து செயற்படும் இடமாக இத்தளம் மாறிவருகின்றது.
இஸ்லாம் தடுத்த ஹராமான பதிவுகள் பகிரப்படுவதனையும், வீட்டுப் பெண்கள் (மனைவி, வயதுவந்த பெண்கள்... ect...) போன்றோரது புகைப்படங்களை பதிவிடுவதனையும், ஆண்கள் அந்நிய பெண்களோடும் பெண்கள் அந்நிய ஆண்களோடும் சகஜமாக comment பண்னுவதையும் நக்கல் நையாண்டிககள் அடிப்பதனையும் வாழ்த்துக்கள் சொல்லி அத்தொடர்பை தனிப்பட்ட chatting வரை தொடர்வதனையும் அதனால் பல ஹராமான விடையங்கள் நிகழ்ந்திடுவதனையும் யாரும் மறுதலிக்க முடியாது.
Facebook முகநூலை இஸ்லாத்தை கற்பதற்கும், இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வதற்கும், உலகளாவிய தகவல்களை அறிந்துகொள்வதற்கும் ஒருவர் இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டு பயன்படுத்துவார் எனில் அது அனுமதிக்கப்பட்டதாகும். அதுவல்லாமல்
01- சினிமா படங்களை பதிவதற்கும், பகிர்வதற்கும் பயன்படுத்துவது பாவமாகும்.
02- இசையுடன் கூடிய பாடல்ஙனகளை பதிவிடுவதற்கும், பகிர்வதற்கும் பயன்படுத்துவது பாவமாகும்.
03- ஆண்கள் அந்நிய பெண்களோடும் பெண்கள் அந்நிய ஆண்களோடும் comment என்றும் தனிப்பட்ட chatting என்றும் வரம்புமீறீ பயன்படுத்துவது பெரும் பாவமாகும்.
04 - சினிமா நடிகை நடிகர்களின் புகைப்படங்களை பதிந்து இவர்தான் & இவள்தான் எனது favorite என பதிவிடுவதோ அல்லது அவைகளை profile picture களாக வைத்திருப்பதோ ஒரு முஸ்லிமிற்கு ஆகுமானதல்ல.
05 - போலிக் கணக்குகளை ஆரம்பித்து தனது விரோதியை பழிவாங்கும் எண்னத்தில் அவன் & அவள் மீது இல்லாத பொல்லாத பொய்கள், இட்டுக்கட்டுக்களை பரப்புவதும், ஏன் சிலவேளை சில பெண்களது போட்டோக்களை பிரசுரித்து அவளை தரக்குறைவாக இழிவுபடுத்துவதும் பெரும்பாவமேயாகும்.
06 - கேள்விப்படும் செய்திகளையெல்லாம் அதன் உண்மைத்தன்மையை அறியாது பரப்பி வீணான பித்னாக்களை உண்டுபன்னிவிடுவதும் பாவமேயாகும்.
இப்படி பல முறைகேடுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
அல்லாஹ் முஃமீன்களது பண்புகளைப் பற்றிக் கூறுகையில்.....
"இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்"(முஃமினூன்-03)
ஆக மொத்தத்தில் முஸ்லீம்களாக இம்முகநூலைப் பயன்படுத்தும் நாம் எந்தவொரு செய்தியை பதிவதற்க்கு முன்போ, அல்லது பகிர்வதற்க்கு முன்போ இது இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டதா இல்லையா என்பதனை ஒருமுறை பரிசீலித்து பதிவிடவும், பகிர்ந்திடவும் எம்மை பலக்கிக்கொள்வோம். இல்லையெனில் மறுமையில் எமது நிலை மிக மோசமாகிவிடும்.
#குறிப்பாக முகநூல் பயன்பாடுத்தும் பெண்களது விடையத்தில் பெற்றோர்கள், கனவன்மார்கள் மிகக் கூடிய கரிசனை செலுத்திடுங்கள். சிலரது தவரான செயல்களினால் பல அனாச்சாரங்களும், குடும்ப சீரழிவுகளும் நிகழ்ந்தவன்னம் உள்ளன.
நம் அனைவரையும் ஹராமானவைகளைத் முற்றாக தவிர்ந்து நடப்பவர்களாகவும் ஹலாலை மட்டுமே செய்திடுபவர்களாகவும் வல்ல இறைவன் ஆக்கிடுவானாக!

No comments

Powered by Blogger.