Header Ads



புதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கி பயணிக்கவே அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தியதாக ஜனாதிபதி தெரிவிப்பு



நாட்டின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு புதிய அமைச்சுக்களை பொறுப்பேற்ற அமைச்சர்களிடம் தாம் வேண்டுகோள் விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதிய எதிர்ப்பார்ப்புக்களுடன் ஒரே நாடாக முன்னோக்கி செல்வதற்காக அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொண்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

மக்கள் மத்தியில் சிறந்த மாற்றங்கள் ஏற்பட்டால் மாத்திரமே சமூகத்தையும் நாட்டையும் மாற்றியமைக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள 9 அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (22) பதவிப்பிரமாணம் செய்தனர்.

இது தொடர்பிலான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் சிறந்த மாற்றங்கள் ஏற்பட்டால் மாத்திரமே சமூகத்தையும் நாட்டையும் மாற்றியமைக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, புதிய அமைச்சரவை மறுசீரமைப்பு இலங்கையின் அபிவிருத்திக்கு வலுசேர்க்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மறுசீரமைப்பை அடுத்து ஜனாதிபதி விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.