Header Ads



வௌ்ளவத்தையில் கட்டடம் சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த பத்தனை இளைஞரின் பூதவுடல் நல்லடக்கம்...



வௌ்ளவத்தையில் கட்டடம் சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த, பத்தனை கிறேக்லி பகுதியை சேர்ந்த நிரோஷனின் பூதவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

குடும்ப வறுமையால், தொழில்தேடி தலைநகர் விரைந்த ஆயிரமாயிரம் மலையக இளைஞர்களில் ஒருவரே இராமர் நிரோஷன்.

பத்தனை கிறேக்லி பகுதியைச் சேர்ந்த 20 வயதேயான இராமர் நிரோஷன் கடந்த மாதம் முதல் வௌ்ளவத்தையிலுள்ள மண்டபமொன்றில் கடமையாற்றி வந்தார்.

மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இளையவரான நிரோஷன் கல்விப் பொதுத்தராதர சாதாரணத்திற்கு மேல் கல்வியைத் தொடரவில்லை.

வழமைபோன்று தொழிலை ஆரம்பித்த நிரோஷன், கட்டடம் காலனாகும் என சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

சரிந்து வீழ்ந்த கட்டடத்தின் இடிபாடிகளுக்குள் சிக்கியிருந்த நிரோஷன் உயிருடன் மீட்கப்படுவார் என்ற குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு சின்னாபின்னமானது.

மூன்று நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட நிரோஷனின் பூதவுடல், பத்தனை கிறேக்லி பகுதியிலுள்ள அன்னாரின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

நிரோஷனின் இழப்பினால் கிறேக்லி தோட்டமே சோகமயமானது.

No comments

Powered by Blogger.