Header Adsபீஜே வை சவுதி கலாநிதி பாராட்டினாரா?

PJ யை உலகமகா அறிஞராக காட்ட
முயன்ற பீஜே ரசிகர்களின் முயற்சிகளின் உண்மை நிலை பற்றிய தகவல்கள்
---------------------------------------------------------

அப்துல்லாஹ் உவைஸ் அவர்கள் சஊதி
தமிழ் தர்ஜமாவையும் பீஜெ தர்ஜமாவையும் ஒப்பாய்வு செய்தது குறித்து வெளியான கானொளியில் உள்ள சில பகுதிகள்

பீஜெ தர்ஜமாவின் ஆய்வின் இரண்டாவது பாகத்தின் 32:50 நிமிடம் முதல் 55:34 நிமிடம் வரை ஷெய்க் அப்துல்லாஹ் அஷ்ஷஹரீ அவர்கள் பேசியவை:

அப்துல்லாஹ் உவைஸ் அவர்கள் சவூதி தமிழ் தர்ஜமாவையும் பீஜெ தர்ஜமாவையும் ஒப்பாய்வு செய்திருந்தார்கள். இதற்கு முன்னர் இப்படியொரு ஒப்பீடு ஆய்வு முயற்சியை யாரும் செய்ததில்லை என்று குறிப்பிட்டுகிறார்.
பீஜெ வின் தர்ஜமா தவறுகள் முழுவதுமாக இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்.

பீஜெ ஒரு கல்வியாளர் مثقف என்று கூறுகிறார். مثقف என்ற சொல் இஸ்லாமிய அறிஞர்களுக்கு குறிக்க பயன்படுத்தும் வார்த்தையல்ல. சாதாரண  எழுத்தாளர்களுக்கு குறிக்க பயன்படுத்தும் வார்த்தையாகவே இருக்கிறது.

பீஜெ அவர்கள் மத்ரஸாவில் படித்து பிறகு நாத்திகத்திற்கு சென்ற விவரங்களையெல்லாம் கூறிவிட்டு, பிஜேவிற்க்கு எந்த விதமான இஸ்லாமிய அடிப்படை அறிவும் இல்லை என்று குறிப்பிடுகிறார்கள். (44:12 நிமிடம்)

மேலும், பீஜெ அவர்கள் கிராத் கலையை அறவே மறுக்கிறார் என்று குறிப்பிடுகிறார்கள். அவ்வாறு கூறும் அந்த நேரத்தில் ஷெய்க் அவர்கள், ஜெய்னுலாபிதீன் ஹாதா زين العابدين هذا  என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். எந்த ஒரு நல்ல அறிஞர்களுக்கும் இந்த வார்த்தையை பயன்படுத்த மாட்டார்கள்.

மாற்று மதத்தினர் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாததால்தான்,  பீஜெ இவற்றையெல்லாம் மறுத்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

இன்னொரு இடத்தில் அவரை பற்றி குறிப்பிடுகையில்  ذكي என்ற வார்த்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதுவும் அறிஞர்களுக்கு உபயோகிக்கப்படும் வார்த்தையல்ல.

இந்தியாவில் பல அறிஞர்கள் உருவாகினாலும், அவர்கள் சில விஷயங்களில் வரம்பு மீறி விடுகின்றனர். ஆகவே அத்தகையவர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பதிவு செய்கிறார்.

மனிதர்கள் குறையுள்ளவர்கள். குறைகளுக்கு அப்பாற்பட்டன் அல்லாஹ் ஒருவனே என்று கூறிவிட்டு, அப்துல்லாஹ் உவைஸ் அவர்களை தங்கள் ஆய்வில் நிதானமாகவும் நீதமாகவும் நடந்து கொண்டீர்கள் என்று பாரட்டுகிறார்.

சூரத்துல் கஹப் எட்டாவது வசனத்தில் பீஜெ செய்த பிழையை சொல்லி சிரித்தவராக, கிராத்தை மறுக்கும் பீஜெ விற்கு அப்துல்லாஹ் உவைஸ் அவர்கள் கொடுத்த மறுப்பை பாராட்டிகிறார்.

சஊதியில் வெளியிடப்படும் தமிழ் தர்ஜமா மக்களுக்கு புரியும் விதத்தில் இல்லை மேலும் பின்குறிப்புகள் இல்லை என்பதும் சரியே என்று ஏற்றுக்கொள்கிறார். 

இந்த ஆய்வின் முத்தாய்ப்பாக, பீஜெவின் தர்ஜமாவில் இருக்கும் குழப்பங்களுக்கு காரணம், ஸலப்களின் புரிதல்களை ஏற்றுக்கொள்ளாமல் போனது தான் என்று முடிவு கூறுகிறார்.

மேலும் ஷெய்க் அவர்கள், இது போன்ற ஆய்வுகளின் மூலம் உலகில் குரானை பற்றி எப்படியெல்லாம் மோசமான வேலைகளும் திருபுகளும் செய்யப்பட்டிருக்கிறது என்று அறிகிறோம் என்று மிகவும் வருத்தத்துடன் பதிய வைக்கிறார்.

மேலும், பீஜெ சிந்தனை ரீதியிலான ஒரு வழிகேட்டில் இருக்கிறார் என்று கூறுகிறார். 

மேலும், சஊதி தர்ஜமாவை எளிமைபடுத்தி, தேவையான இடங்களில் விளக்க உரைகளை சேர்த்து, பீஜெவின் மொழிபெயர்ப்பில் தவறுகளை ஒதிக்கி விட்டு, அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்து, சஊதி சார்பாக ஒரு நல்ல தர்ஜமாவை உருவாக்க முயற்சிப்போம் என்று முடிக்கிறார்.

அல்லாஹ் போதுமானவன்.

பதிவு 2:

சகோதரர் பீ ஜே அவர்களின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு மற்றும் விரிவுரை சம்பந்தமான
600 பக்கங்களைக் கொண்ட விமர்சன ஆய்வின் முடிவுகளில் சில!!!
சாதகங்கள்
1. ஆசிரியரின் நுணுக்கமான பாராட்டத்தக்க சில புரிதல்கள்
2. ஆதாரமற்ற ஹதீஸ்கள் மிகக்குறைவு
3. ஓரிறைக் கொள்கைக்கு முக்கியத்துவம்
4. வழிதவறிய கூட்டங்களுக்கான மறுப்புக்கள்
பாதகங்கள்;
5. ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுத்தல்
6. தவறான மொழிபெயர்ப்பு முறைகள்
7. அறிவியல் சான்றுகள் என்ற பெயரில் வசன நடைக்கும் அறபு மொழி மற்றும் நல்லறிஞர்களின் விளக்கங்களுக்கும் முரணாக அமைந்த ஆய்வுகள்
8. முன் பின் முரணான கருத்துக்கள்
9. அல்குர்ஆனியக் கலைகள் சார்ந்த பாரிய தவறுகள்
10. தப்ஸீரின் அடிப்படைகள் பற்றிய அறிவீனம்
11. வரலாற்றில் யாரும் கூறாத தவறான சொந்த விளக்கங்கள்
12. அல்லாஹ்வின் சில பண்புகளுக்கு வலிந்துரை போன்ற அகீதா ரீதியான தவறுகள்
13. பிக்ஹ் ரீதியான தவறுகள்
14. தவறான விமர்சனங்கள்
15. ஆய்வுமுறைக் குறைபாடுகள்
16. தனது சொந்தக் கருத்தை மார்க்கத்தின்; அடிப்படையாக்கி அல்குர்ஆனின் நேரடிக் கருத்துக்களை திரிபுபடுத்தல்
17. சில கேள்விகளுக்குப் பதில் ஹதீஸில் இருக்கும் போது சொந்த விளக்கத்தின் அடிப்படையிலும் பைபிளின் அடிப்படையிலும் விளக்கம் கூறல்
18. ஊகத்தின் அடிப்படையில் விளக்கமளித்தல்
19. ஸஹாபாக்களின் கருத்துக்களை எடுப்பதில்லை என்று கூறிவிட்டு அவற்றை மேற்கோள் காட்டுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டமை.
20. அறிஞர்கள் கூறாதவற்றை அவர்களின் மீது கூறல்
21. அறிஞர்களின் கூற்றுக்களைப் பற்றிய தவறான புரிதல்
22. அல்குர்ஆன் வசனங்களுக்கிடையில் தேவையற்ற முரண்பாடுகளைத் தோற்றுவித்து மாற்றுவிளக்கம் கூறல்.
23. அச்அரிய்ய முஃதஸிலா சிந்தனைகளின் பாதிப்பு
24. நவீன பகுத்தறிவுவாத சிந்தனைப் பள்ளியின் தாக்கம்

பதிவு :3 வீடியோ

https://youtu.be/aynie18XqnQ

No comments

Powered by Blogger.