Header Ads



முஸ்லீம் இளைஞர்கள் மீது பலி சுமத்தல் நியாயமானதா?

தமிழ் முஸ்லிம் பிரதேசத்தில் திட்டமிட்ட இன முறுகலை ஏற்படுத்தும் சதிகாரக்கும்பல்.
*********** ************* *******************
28.05.2017 நேற்றய தினம் மல்லிகைத்தீவு பெருவெளிப் பகுதியில் மூன்று பாடசாலை மாணவிகள் பாலியல் வல்லுறவுக்குற்படுதப்பட்டதாவும் அதற்கு முஸ்லிம் இளைஞர்கள் தான் காரணம் என ஜோடிக்கப்பட்டு அப்பகுதி பாடசாலையில் வேலை செய்த மேசன்மாருக்கு உணவு கொண்டு சென்ற ஒருவரும்,அவர் தாக்கப்பட்டதை அறிந்து பொலிஸாருடன் சென்ற கென்ட்ரெக்ட் உரிமையாளரும் பொலிஸார் முன்னிலையிலேயே பறித்தெடுக்கப்பட்டு மிகவும் மிலேச்சத்தனமான முறையில் தாக்கப்பட்டு தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில் அப்பகுதி பாடசாலையில் கட்டிட வேலையில் இருந்த இரு இளைஞர்கள் தான் துஷ்பிரயோகத்திற்கு காரணம் என அப்பகுதி இளைஞர்களினால் துரத்தியடிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அங்கிருந்து தப்பித்து மூதூர் பொலிஸ் நிலையத்தை அடைந்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை மாணவர்களை ஒன்று திரட்டி, போக்குவரத்தினை தடை செய்து,வீதிகளில் டயர்களை எரித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் தமிழ் இளைஞர்கள் ஈடுபட்டனர்.

உண்மையில் நடந்தது என்ன....?

#மாணவிகள் வல்லுறவுக்குற்படுத்தப்பட்ட சம்பவத்திற்கும் முஸ்லிம் இளைஞர்களுக்கும்  எவ்விதமான சம்மந்தமும் இல்லை. அவ்வாறு செய்திருந்தால் பொலிஸாரிடம் செல்லாது தப்பித்திருக்கலாம்.

#மேலும் மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவிகள், முஸ்லிம் இளைஞர்களுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

#இவ்வாறானதொரு நிலையில் ,இச்சம்பவத்தில் பின்னணியில் யுத்தகாலத்தில் தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்த ஒரு கும்பலின் திட்டமிட்ட நிகழ்ச்சிநிரல் காணப்படுகிறது.
#இவர்களே லாவண்யா லாவண்யா முகப்பு புத்தக கணக்கின் மூலம் மூன்று மாணவிகளும் பாலியல் வல்லுறவுக்குற்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பொய்யான புகைப்படங்களை பிரசுரித்து தமிழ் மக்களின் உணர்வுகளை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டி விடுகிறார்கள்.

#இவர்கள் தான் சம்பூர் முதல் ஈச்சிலம்பற்று வரையான பாடசாலை மாணவ மாணவிகளையும், தமிழ் மக்களையும் ஒன்றுதிரட்டி இதுவரை காலமும் சகோதரத்துவ உணர்வோடு வாழ்ந்த தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைக்க முனைகின்றனர்.

#எனவே இவ்விடயத்தை பொதுமக்கள் மிகவும் கவனமாகக் கையாள்வதோடு,பொலிஸார் இக்குழுவினரை கைது செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வது இரு சமூகத்தையும் ஓர் பேரழிவிலிருந்து பாதுகாக்கும்.

No comments

Powered by Blogger.