Header Ads



ஸஹருடைய நேரம் எது, எவ்வளவு? ஜே.எம். சாபித் ஷரயி



ஸஹருடைய நேரம் எது, எவ்வளவு? 

ஜே.எம். சாபித் ஷரயி

நோன்புக்காக ஸஹர் செய்வது என்பது நபிகளார் காட்டித் தந்த ஒரு ஸுன்னாவாகும்.

அனஸ் ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்  - நபி ஸல் அவர்கள் கூறினார்கள் (ஸஹர் செய்யுங்கள் நிச்சையமாக ஸஹர் செய்வதில் பரகத் இருக்கின்றது) (ஆதாரம்- புஹாரி)

ஸஹர் செய்தல் என்பது ஒரு நோன்பாளிக்கு மிக அத்தியவசியமான அம்சமாகும். அதனூடாக ஒரு நோன்பாளி நிறையவே பயன்களை பெற்றுக்கொள்கின்றான்.

யுதர்களுக்கு மாறு செய்யும் முகமாக நபி ஸல் அவர்கள் ஸஹர் செய்வதனை ஸஹாபாக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

அம்ர் இப்னு ஆஸ் ரலி அறிவிவக்கின்றார்கள் - நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ( எமது நோன்பிற்கும் யுதர்களுடைய (வேதக்காரர்களுடைய) நோன்பிற்கும் இடையே உள்ள வேறுபாடு ஸஹருடைய நேரத்தில் உணவு உண்பதாகும்) (ஆதாரம் - முஸ்லிம்)

எனவே இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஸஹர் எப்பொழுது ஆரம்பிக்கப்பட வேண்டும் என பலருக்கும் தெரியாமலிருப்பதையும், முறையற்ற நேரங்களில் ஸஹருடைய உணவு உண்ணப்படுவதனையும் அவதானிக்கின்றோம.

நபி ஸல் அவர்கள் எப்பொழுதும் ஸஹர் செய்வதனை பஜ்ருடைய நேரத்திற்கு நெருக்கமாக பிற்படுத்தியே வந்துள்ளார்கள். அதுவே ஸுன்னாவாகும்.

அனஸ்(ரலி) அறிவித்தார். 
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஹ்ர் செய்தோம்; பின்னர், தொழுகைக்கு அவர்கள் தயாராகிவிட்டார்கள்! என்று ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார் - நான் பாங்குக்கும் ஸஹ்ருக்குமிடையே எவ்வளவு நேரம் இருந்தது? என்று கேட்டேன் அதற்கவர் 'ஐம்பது வசனங்கள் (ஓதும்) நேரம் இருந்தது!' என்று பதிலளித்தார். 
(ஸஹீஹ் புகாரி)

இந்த ஹதீஸ் நபிகளாருடைய ஸஹர் செய்யும் நேரம் ஸுபஹுடைய நேரத்தை அண்மித்து இருந்ததனையும், ஸஹருடைய அளவு 50 குர்ஆனுடைய வசனங்களை ஓதுகின்ற அளவிற்கு அமைந்திருந்ததையும் பார்கிள்றோம்.

எனவே நாமும் ஸஹர் செய்வதனை பிற்படுத்துவதே நபிவழியாகும். இன்னும் சில நபிமொழிகளில் நபி ஸல் அவர்கள் சொல்லிக்காட்டினார்கள் நோன்பு திறப்பதனை அவசரப்படுத்தி நோன்பு நோற்பதனை பிற்படுத்தும் காலமெல்லாம் மக்கள் நலவிலே இருப்பார்கள் என்று.

ஆக எமது பிரதேசங்களில் பஜ்ஸருடைய அதானை கவனத்தில் கொண்டு ஸஹர் செய்வதனை பிற்படுத்தி நபிகளாருடைய ஸுன்னாவை நிலைநாட்டிடுவோம்.

2 comments:

  1. உங்கள் கொமட்கள் வரவேர்கப்படுகின்றது.

    ReplyDelete
  2. மிகவும் அருமை

    ReplyDelete

Powered by Blogger.