Header Adsதராவீஹ் தொழுகையின் எண்ணிக்கையில் நபிவழி எது????
தராவீஹ் தொழுகையின் எண்னிக்கையில் நபிவழி எது????

தொகுப்பு-ஜே.எம்.சாபித் ஷரயி

الرد الواضح لمن يقول تجوز زيادة عدد التراويح على إحدى عشر ركعة...
தராவீஹ் தொழுகையின் எண்னிக்கையை 11 ரகாத்துக்களை விட அதிகரிக்க முடியும் என்போருக்கான தெளிவான மறுப்பு!


தராவீஹ் தொழுகையின் எண்ணிக்கையில் இமாம்களுக்கிடையில் பல கருத்து வேற்றுமைகள் இருந்து வருகின்றது. எனினும் நபிகளாரின் ஸுன்னாவில் ஆதாரபூர்வமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ள அனைவரும் ஏற்றுக்கொண்ட எண்னிக்கையே 11 ரகஆதுக்கள் ஆகும்.

ومن المعلوم أن صلاة التراويح سنة ثابتة عن النبي صلى الله عليه وسلم , وقد ثبت في الحديث الصحيح الذي ترويه أم المؤمنين عائشة رضي الله عنها قالت :
((ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على إحدى عشرة ركعة , يصلي أربعا فلا تسل عن حسنهن وطولهن 
ثم يصلي أربعا فلا تسأل عن حسنهن وطولهن 
ثم يصلي ثلاثا )) متفق عليه
ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள் - நபி ஸல் அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத காலங்களிலும் 11 ரகஆதுக்களை விட கூடுதலாக தொழுததில்லை.(நபிகளார்)04 யை தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றி கேட்காதீர்கள். பின்பு 04 தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றி கேட்காதீர்கள். பின்பு மூன்று (வித்ராக) தொழுவார்கள். (புஹாரி, முஸ்லிம்)

இன்னும், ஸஹீஹைனுடைய மற்றும் சிலஅறிவிப்புகளில் நபிகளாரின் இரவுத் தொழுகை 13 ஆக இருந்தது என பதிவுசெய்யப்பட்டுள்ளது.👇
1089 حدثنا عبيد الله بن موسى قال أخبرنا حنظلة عن القاسم بن محمد عن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم يصلي من الليل ثلاث عشرة ركعة منها الوتر وركعتا الفجر

لكن جاء في رواية أخرى عند مالك وعنه البخاري وغيره عنها قالت كان يصلي بالليل ثلاث عشر ركعة ثم يصلي إذا سمع النداء بالصبح ركعتين خفيفتين
ஆயிஷா ரலி அறிவிக்கின்றார்கள்- நபிகளார் இரவில் 13 ரகஆதுகள் தொழக் கூடியவர்களாக இருந்தார்கள். அதில் வித்றும் பஜ்றுடைய 2 ரகஆதுகளும் உள்ளடங்கும். (புஹாரி)💛(இலகுக்காக மேலுள்ள 01 ஹதீஸே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.)

மேலும் முஸ்லிமினுடைய அறிவிப்பிலும்
رواية مسلم من هذا الوجه : كانت صلاته عشر ركعات ، ويوتر بسجدة ، ويركع ركعتي الفجر ، فتلك ثلاث عشرة .
நபிகளாரின் இரவுத்தொழுகை 10 ரகஆதுகளாக இருந்தது (பின்பு) 01 வித்ர் செய்வார்கள் மேலும் பஜ்றுடைய 02 ரகஆதுகளையும் தொழுவார்கள். (முஸ்லிம்)
(இதுவே 13 ரகஆது என்பதன் விளக்கமாகும்)💛

இந்த ஹதீஸ்களும் கூட நபிகளாரின் இராவணக்கம் 11 ஆகவே இருந்தது என்பதனை தெளிவுபடுத்துகின்றது.

இங்கு 13 என்பது 11 டன் சேர்த்து நபிகளார் தொழுத சுபஹின் 2 ரகஆத் சுன்னத்துகளாகும்.

அடுத்த கருத்தாக 11 உடன் சேர்த்து இஷாவின் 02 சுன்னத்துக்களாகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது காரணம் நபிகளார் நபிலான தொழுகைகளை வீட்டிலேயே தொழுவார்கள்.

அடுத்து நபிகளார் ரமலான் மாதம் ஸஹாபாக்களை பள்ளியில் ஒன்று சேர்த்து ஜமாதாக இரவுவணக்க தொழுகை நடாத்தியதும் 11 ரகஆத்துகளேயாகும்.
وعن جابر بن عبد الله رضي الله عنه قال : صلى بنا رسول الله صلى الله عليه وسلم في شهر رمضان ثمان ركعات وأوتر فلما كانت القابلة اجتمعنا في المسجد ورجونا أن يخرج فلم نزل فيه حتى أصبحنا ثم دخلنا فقلنا يا رسول الله اجتمعنا البارحة في المسجد ورجونا أن تصلي بنا فقال : 
( إني خشيت أن يكتب عليكم )
ஜாபிர் ரலி அறிவிக்கின்றார்கள் - ரமலான் மாதத்தில் நபிகளார் எங்களுக்கு 08 ரகஆதுகள் தொழுகை நடாத்தி வித்றும் தொழுவித்தார்கள்.அடுத்த நாள் நாங்கள் பள்ளியில் ஒன்று சேர்ந்து நபிகளார்(வீட்டை விட்டும்) வெளிவருவார்கள் என காலையை அடையும் வரை எதிர்பார்திருந்தோம். பின்பு நபிகளார் எங்களிடம் சமூகம் தந்தார்கள் அல்லாஹ்வின் தூதரே நேற்றிரவு நாங்கள் பள்ளியில் ஒன்று சேர்ந்து நீங்கள் எங்களுக்கு தொழுகை நடாத்துவீர்கள் என எதிர்பார்திருந்தோம் எனக் கூறினோம்.அநற்க்கு நபியவர்கள் உங்கள் மீது (இத் தொழுகை) விதியாக்கப்பட்டுவிடுமோ என அஞ்சினேன் என்றார்கள்.

எனவே இங்கு கூறப்படும் அத்துனை ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் 11 ரகஆத்துகளே நபிவழி என்றும் அதற்கு கூடுதலாக நபிகளாரோ ஸஹாபாக்களோ தொழுததில்லை என்பதனை பறைசாற்றுகின்றன.

23 யை நியாயப்படுத்துவோரின் எதிர்வாதங்களும் பதில்களும்


01- நபிகளார் 20 தொழுததாக முஸன்னப் இப்னு அபீ ஷைபாவில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தி.
عن ابن عباس رضي الله عنهما ( أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً وَالْوِتْرَ ).
رواه ابن أبي شيبة في " المصنف " (2/ 164)

حديث العشرين ركعة ضعيف جدا ولا يجوز العمل به
இந்த செய்தி மிக பலயீனமானதாகும் இதனைக் கொண்டு அமல் செய்யவும் முடியாது.

ثم قال الحافظ ابن حجر رحمه الله في الفتح ( 4 / 205 - 206 ) تحت شرح الحديث 
وأما ما رواه ابن شيبة من حديث ابن عباس : كان رسول الله صلى الله عليه وسلم يصلي في رمضان عشرين ركعة والوتر فإسناده ضعيف

இப்னு அப்பாஸ் ரலி அறிவிக்கிறார்கள்- நபியவர்கள் ரமலானில் 20 ரகஆதுகளும் வித்ரும் தொழுக் கூடியவர்களாக இருந்தார்கள்.
இந்த செய்தி ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாத மிக பலயீனமான செய்தியாகும்.

அல் ஹாபிழ் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது பதுஹுல் பாரி எனும் கிரந்த விரிவுரையில் ( 4 / 205 - 206 ) இந்த செய்தியின் பலயீனம் குறித்து பதிவு செய்துள்ளார்கள்...

இமாம் அல்பானியின் கூற்று 

قال ( الألباني ) : وحديث ابن عباس هذا ضعيف جدا كما قال السيوطي في " الحاوي للفتاوي " 2 / 73 وعلته أن فيه أبا شيبة إبراهيم بن عثمان قال الحافظ في التقريب : " متروك الحديث "
முஹத்தித் நாஸிருத்தின் அல்பானி ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள் - இப்னு அப்பாஸ் ரலியின் இந்த ஹதீஸ் மிக பலயீனமானதாகும். இமாம் சுயூதி அவர்கள் தனது "அல்ஹாவி லில் பதாவா" வில் 02/73ல் இந்த ஹதீஸில் இடம்பெறும் அபூ ஷைபா இப்றாஹீம் இப்னி உத்மான் எனும் அறிவிப்பாளர் பலயீனமானவர் என குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் அல்ஹாபில் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது "தக்ரீபுத் தஹ்தீப் " நூலில் இந்த அறிவிப்பாளை " மத்றூகுல் ஹதீத்" என விமர்சணம் செய்துள்ளார்கள்...
மேலும் இமாம் தஹபி, இமாம் புஹாரி, இமாம் நஸாயி, இப்னு மயீன் போன்ற அறிஞ்சர்களும் இன்னும் பலரும் இந்த அறவிப்ளாளரின் பலயீனத்தை விமர்சனம் செய்துள்ளனர்.
எனவே தான் இது ஆதாரத்திற்கு எடுக்க முடியாத செய்தியாகும்.

02- அலி ரலி அவர்கள் ரமலானில் காரிகளை ஒன்று கூட்டி அவர்களில் ஒருவரை இமாமாக நியமித்து 20  ரகஆத் தொழ வைக்குமாறு ஏவினார்கள்.பிறகு அலி ரலி வித்று தொழுகை நடாதுவார்கள்.(பைஹகி)

இந்த ஹதீஸில் இடம்பெரும் ஹம்மாத் இப்னு ஸுஹைப் என்பவர் பலயீனமானவர் என இமாம் தஹபி இமாம் இப்மு முயீன் இமாம் யஹ்யா இமாம் புஹாரி இமாம் நஸயி போன்றோர் "லயீப்"  "பலயீனமானவர்"  "லம் யுக்தப் ஹதீதுகு"  "இவரின் ஹதீஸை எழுதவே முடியாது "  "பீஹி நழ்ருன்" என்றெல்லாம் விமர்சணம் செய்துள்ளனர்.

எனவே இந்த செய்தியும் ஆதாரத்திற்கு எடுக்க முடியாத பலயீனமான செய்தியாகும்.

03- உபை இப்னு கஃப் அவர்கள் மதீனாவில்  மக்களுக்கு 20 ரகஆதுகள் தொழுவித்துவந்தார்கள்.(இப்னு அபீ ஷைபா)
روى ابن أبي شيبة في مصنفه عن عبد العزيز بن رفيع قال : ( كان أبي بن كعب رضي الله عنه يُصلي بالناس في رمضان بالمدينة عشرين ركعة,يوتر بثلاث

இந்த செய்தியும் பலயீனமானதாகும்.இதில் இடம்பெரும் அப்துல் அஸீஸ் இப்னு ரபீஃ எனும் அறிவிப்பாளரைப் பற்றி எழுந்துள்ள விமர்சணமானது எந்த உபை இப்னு கஃப் ரலியை பற்றி இவர் அறிவிக்கின்றாரோ அந்த உபை இப்னு கஃப் ரலியின் காலத்தில் இவர் பிறந்தவர் இல்லை என்பதாகும். எனவே அவரது காலத்தில் பிறக்காத ஒருவர் அவரை நேரடியாக பார்ததைப் போல அறிவிப்பது பொய்யாகும்.
அதனால் இந்த பலயீனமான செய்தியையும் ஆதாரத்திற்கு எடுக்க முடியாது.

04- உமர் ரலியின் காலத்தில் மக்கள் 23 தொழக் கூடியவர்களாக இருந்தார்கள். (முவத்தா மாலிக்)

روى الإمام مالك في (الموطأ) عن يزيد بن رومان أنه قال : ( كان الناس يقومون في زمان عمر بن الخطاب رضي الله عنه بثلاث وعشرين ركعة)

இந்த செய்தியின் பிண்னணி யாதெனில் 

وروى الإمام مالك في الموطأ بسنده عن السائب بن يزيد قال : أمر عمر بن الخطاب : أبي بن كعب وتميما الداري أن يقوما للناس في رمضان بإحدى عشرة ركعة

ஸாயிப் இப்னு யஸீத் ரலி அறிவிக்கின்றார்- உமர் ரலி அவர்கள் உபை இப்னு கஃப் ரலி அவர்களுக்கும் தமீமுத் தாரி ரலி அவர்களுக்கும் ரமலானில் மக்களுக்கு 11 ரகஆதுகள் தொழுகை நடாத்துமாறு கட்டளையிட்டார்கள். (முஅத்தா மாலிக்)

மேற்குறிப்பிட்ட இந்த செய்தியை அறிவிக்கும் 👤ஸாயிப் ரலி👤 எனும் ஒரே அறிவிப்பாளரிடமிருந்து முஹம்மத் இப்னு யூசுப் என்கின்ற அறிவிப்பாளரும் எஸீத்👷என்கின்ற அறிவிப்பாளரும் குறிப்பிட்ட ஒரே செய்தியை 02 வித்தியாசமான கோணத்தில் அறிவிக்கின்ரனர்.

01- யூசுப்- 11 தொழுவிக்குமாறு கஃப் ரலிக்கும், தமீமுத்தாரி ரலிக்கும் உமர் ரலி கட்டளையிட்டார்கள்.

02- எஸீத்- உமர் ரலியின் காலத்தில் மக்கள் 23 தொழுதார்கள்.

இங்கு ஒரே ஆசிரியரிடமிருந்து கேட்ட 2 மாணவர்கள் ஒன்றுக்கொன்று முரணாக அறிவிக்கின்ற பொழுது அவர்களில் மிக நம்பகமானவரின் செய்தியே எடுக்கப்படும்.
இதில் குறிப்பிட்ட இரண்டு அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களே ஆனால் எஸீதை விட முஹம்மத் இப்னு யூசுப் மிக நம்பகமானவராவார். எஸீதைப் பற்றி இமாம் அஹ்மத் அவர்கள் "முன்கருல் ஹதீஸ்" என விமர்சணம் செய்துள்ளார்கள்.
இதனடிப்படையில் மிக நம்பகமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக அவரை விட நம்பகத்தன்மையில் குறைந்த ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கும் செய்தி ஷாதான ( பலயீனமான) செய்தியாகும்.

எனவே உமர் ரலி அவர்கள் மக்களுக்கு 11 தொழுவிக்குமாறு ஏவிய செய்தியே மிக ஸஹீஹானதும் நபிகளாரின் வழிகாட்டலுக்கு நெருக்கமானதுமாகும்.

ஒரு வாதத்திற்கு உமர் ரலியின் காலத்தில் மக்கள் 23 தொழுதார்கள் எனும் செய்தி ஆதாரமானது என எடுத்துக் கொண்டாலும் அதற்கும் உமர் ரலிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது அவர் காலத்தில் மக்கள் தொழுதார்கள் என்றுதான் குறிப்பிட்ட செய்தி வறுகிறதே ஒளிய உமர் ரலி ஏவினார்கள் என்றோ உமர் ரலி தொழுவித்தார்கள் என்றோ வரவில்லை. எனவே மக்கள் செய்வதெல்லாம் நமக்கு ஆதாரமாகாது. உமர் ரலி தெளிவாக 11 தொழுவிக்குமாறு 2 ஸஹாபாக்களுக்கு ஏவினார்கள் என்பதே உமர் ரலிக்கு சொந்தமான மிக ஆதாரமான செய்தியாகும்.

எனவேதான் அன்பின் ஈமானிய உரவுகளே! எமது மனோ இச்சைகளையும் விருப்பு வெறுப்புகளையும் கலைந்து அல்லாஹ்வும் அவனது தூதரும் தீர்பளித்த ஸுன்னாவாகிய தெளிவான ஆதாரங்கள் கொண்டு நிறூபனமான 11 ரகஆதுகளை மட்டும் நபிவழியாக தேரந்தெடுப்போம்....

அன்புடன்- சாபித் ஷரயி

No comments

Powered by Blogger.