Header Ads



ஆப்கானிஸ்தான் தலைநகரில் இன்று 31.05.17 குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாரிய குண்டுவெடிப்பு 80 இற்கும் மேற்பட்டோர் பலி.

انا لله وانا اليه راجعون
May 31, 2017

சற்று நேரத்திற்கு முன் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டு தூதர்கள் தங்கியுள்ள குடியிருப்பு பகுதியின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 80 இற்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாமென அஞ்சப்படுகிறது.
குறித்த தற்கொலை தாக்குதல் இடம்பெற்றுள்ள பகுதியிலேயே, அந்நாட்டு ஜனாதிபதி மாளிகை மற்றும் வெளிநாட்டு தூதுவர்களின் குடியிருப்புகள் காணப்பட்டுள்ளன.

மேலும் அண்மைக்காலமாக ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் கார் குண்டு மூலம் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

இருப்பினும் குறித்த தாக்குதல் குறித்து இதுவரை எந்த தீவிரவாத அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை, அதோடு உயிரிழந்தோர் மற்றும் காயமுற்றோர் பற்றிய உத்தியோகப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படாத நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் இடுப்பற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.